அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.344 அதிகரிப்பு..

by Column Editor

கடந்த வாரங்களில் தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,473 ஆகவும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,744 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,511 க்கும், ஒரு சரவன் ரூ.36,088 க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், நேற்று ரூ.65.30 க்கு விற்பனையான ஒரு கிறாம் வெள்ளியின் விலை இன்று ரூ.65.50 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment