நீண்ட நேரம் உடலுறவு! இனி படுக்கையில் டயர்டே ஆகாது.. சூப்பர் டிப்ஸ்!

by Editor News

கணவன் மனைவி உறவில் காதலும், காமமும் சரி சமமாக இருக்கும் போது சண்டைச் சச்சரவுகள் ஏற்படாது. காதலை நேரம் காலம் பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும் அள்ளி அள்ளி கொடுக்கலாம். ஆனால் உடலுறவுக்கான நேரத்தை தம்பதிகள் கிள்ளி தான் கொடுக்கின்றனர். அதாவது கொஞ்சம் தான் நேரம் ஒதுக்குவார்கள். அந்த குறைந்தபட்ச நேரத்தில் சோர்வு இல்லாமல் எப்படி தாம்பத்தியம் கொள்வது என்பது குறித்து இங்கு காணலாம்.

உங்களுடைய துணை பாலியல் விஷயங்களில் அதிகம் வெட்கம் கொள்பவராக இருந்தால் அதை போக்குவதற்கு உடலுறவு நேரத்தை கொஞ்சம் நீட்டிக்க திட்டமிடுங்கள். உடலுறவு தொடங்கியவுடன் கிளைமாக்ஸுக்கு செல்லாமல் மெதுவாக அவருடைய உடலை சீண்டுங்கள். உங்களிடம் அவர் வசதியாக உணரும் வகையில் அன்பாகவும் அரவணைப்புடனும் படுக்கையில் நடந்து கொள்ளுங்கள்.

பாலியல் உறவு குறித்த விஷயங்களை அதிகம் தெரிந்து கொள்ளும்போது, உங்களுக்கு அதில் அனுபவம் மேம்படும். இதனால் உடலுறவை எந்தெந்த கோணங்களில் செய்யும் போது இன்பம் அதிகமாக கிடைக்கும் என்பது குறித்த புரிதல் உண்டாகும். பாலியல் உறவில் பயிற்சிதான் உங்களை மேம்படுத்தும். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியை பெறலாம்.

பாலியல் விஷயங்கள் குறித்து உங்களுடைய துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள். புதிய விஷயங்களை முயன்று பார்க்க இருவரும் மனம் ஒத்து செயல்பட்டால் சோர்வடையாமல் அதிக இன்பத்தை பெற முடியும். பாலியல் உறவுகளில் நீண்ட நேரம் செயல்படுவதற்கு உங்களுடைய உடல் ஃபிட் ஆக இருக்க வேண்டும். இதற்கு உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்வது அவசியம். துரித உணவுகள், புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நலம்.

பெண்களின் உடலை ஆராதிப்பது அவர்களிடம் நெருங்குவதற்கு உதவும். அவர்களின் உடல் முழுவதும் முத்தங்களை பொழிவதன் மூலம் இருவரும் கிளர்ச்சி அடைய முடியும். முத்தங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக முயற்சி செய்யலாம். அதேபோல உடலுறவு கொள்ளும் பொசிஷன்களையும் புதுமையாக முயற்சி செய்யலாம். பல பொசிஷன்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக முயன்று உங்களுக்கு ஏற்ற பொசிஷனை கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருக்கும்.

உங்கள் துணையின் அந்தரங்க உறுப்புகளான மார்பு, யோனி, முதுகு, தொடைகள் போன்ற மென்மையான பகுதிகளை கவனமாகவும், அன்பாகவும் தொடுங்கள். உங்களுடைய தொடுதல் வலியை ஏற்படுத்தினால் பெண்கள் எரிச்சல் அடைவார்கள். மீண்டும் உறவு கொள்ள விரும்பமாட்டார்கள். அதனால் ஒவ்வொரு தொடுதலிலும் இனிமை இருக்குமாறு கவனமாக செயல்படுங்கள்.

உடலுறவு போது முன் விளையாட்டுகளில் அதிக நேரம் எடுத்துக் கொண்டால் இருவரின் பாலியல் இன்பமும் அதிகமாக இருக்கும். மெல்ல மெல்ல உச்சகட்டத்தை நெருங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நீண்ட நேரம் உடலுறவில் இணைந்திருக்க முடியும்.

Related Posts

Leave a Comment