சிம்புவின் 48-வது திரைப்படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன்.!

by Lifestyle Editor

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அறிவிப்பு வெளியானது.

இது ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகவிருப்பதால், இதன் ஃப்ரீ ப்ரொடெக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் சிம்புவும் இந்த திரைப்படத்திற்காக தயாராகி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல 2024 -ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு பட குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த திரைப்படத்தில் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறவிருப்பதால், இந்த திரைப்படம் வரும் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment