திரைத்துறையில் பெரும் பங்களிப்பிற்காக இயக்குனர் மணிரத்னத்திற்கு சிறப்பு விருது!

by Column Editor

இயக்குனர் மணிரத்னத்துக்கு பாரத் அஷ்மிதா தேசி விருது அளிக்கப்பட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம்ஐ டிஉலக அமைதி பல்கலைக்கழகம், (MIT World Peace University), ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளைத் தேர்வு செய்து அதில் ஐந்து பேருக்கு விருது வழங்கி வருகிறது.

திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக இயக்குநர் மணிரத்னத்துக்கு இந்த வருடம் விருது வழங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது விழா நாளை (பிப்ரவரி 3) ஆம் தேதி இணைய வழியில் நடைபெறுகிறது.

பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் தலா ரூ. ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆகியவற்றை இந்த விருது உள்ளடக்கியது.

நிர்வாகத்தில் சிறந்த ஆசிரியர்: பேராசிரியர் காவில் ராமச்சந்திரன்

வெகுஜன ஊடகம்/என்ஜிஓவின் சிறந்த பயன்பாடு: ஷெரீன் பான்

சிறந்த நடிப்பைப் பயன்படுத்தியவர் / திரை இயக்கம்: மணிரத்னம்

பாடல்/இசை/பாடலின் சிறந்த பயன்பாடு: சங்கர் மகாதேவன்

கண்டுபிடிப்பு மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு: டாக்டர் கிருஷ்ணா எல்லா

பாராளுமன்ற நடைமுறைகளின் சிறந்த இளம் பிரதிநிதி: கௌரவ் கோகோய்

ஆகியோருக்கு அவரவர் துறையின் சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment