நயன்தாராவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ரிலீஸ் எப்போது ?… டீசர் குறித்த அப்டேட்டும் வெளியானது !

by Column Editor

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ரொமெண்டிக் காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு விஜய் சேதுபதியுடன் நயன்தாரா இணைந்து நடிப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் வெளியாகும் என்றும், வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி டீசர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் முதலில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment