சனிப்பெயர்ச்சி .. திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்..!

by Lifestyle Editor

ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயரும் நிலையில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

மாலை 5 20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு சனிபகவான் இடப்பெயர்ச்சிக்கு செய்ய இருக்கும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை ஆன்லைன் நடைபெற்று வருவதாகவும் அபிஷேகம் உள்பட அர்ச்சனைகளுக்கும் கட்டணடிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் சார்பில் திருநள்ளாறுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, இராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment