40 வயதிற்கு பின்னர் உடலுறவு சுகத்தை அதிகரிப்பது எப்படி?

by Lifestyle Editor

பொதுவாகவே, 40 வயதிற்கு பின்னர் பாலின பாகுபாடற்று ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே உடலுறவு வைத்துக்கொள்வதில் சில பிரச்சனைகள் இருக்கும் என கூறப்படுகிறது. இதை தவிர்ப்பது எப்படி..? 40 வயதிற்கு பின்னர் முழுமையாக படுக்கையறை சுகத்தை அனுபவிப்பது சாத்தியமா..? அனைத்து கேள்விகளுக்கும் இங்கே விடை இருக்கிறது.

40 வயதிற்கு பின்னர் உடலுறவு சுகம் குறைந்து போவது ஏன்..?

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொதுவாக ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு வகையான பாலியல் உறவு பல்வேறு நிலைகளை அடையும். அதிகளவில், ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் உடலுறவு கொள்வதில் சில சிரமங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு அப்படியே நேர்மறையான விஷயம் நடக்கும். இதற்கு உளவியல் ரீதியாகவும் மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பார்க்கப்படுகின்றன. இதை எப்படி அதிகரிப்பது..? உடலுறவு சுகத்தின் உச்சத்தை 40 வயதிற்கு மேல் அடைவது எப்படி..?

இளமை-முதிர்ச்சி:

40 வயதிற்கு முன்பு வரை நம் உடலில் இளமை என்பது இருக்கும். அதனால், நம்மால் அந்த தேகத்தில் இயல்பாக, உடலுறவு கொள்ள ஏற்ற வகையில் இருப்பதாக உணர முடியும். ஆனால் 40 வயதிற்கு மேல் உடல், மனம் என அனைத்திலும் முதிர்ச்சி ஏற்பட்டுவிடும். அதனால் இதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் பலரால் உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது. இதை தவிற்பதற்கு முதலில் நாம் நம் உடலில் இயல்பாக உணர வேண்டும். உங்களுக்கு வயதாகி விட்டது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த புரிதல் வந்து விட்டாலே படுக்கையறை வாழ்க்கை பாதிக்காமல் இருக்கும்.

காமத்தை உணருங்கள்..

இதற்கு முன்பு வரை காமம் என்றால் உங்கள் பார்வையில் வேறாக இருந்திருக்கலாம். ஆனால், உடலுறவு கொள்வது மட்டும் காமம் கிடையாது. கட்டிப்பிடித்து உறங்குவது, முத்த மழையில் நனைய வைப்பது, ஒருவருக்கொருவர் சுய இன்பம் செய்து கொள்வது என எல்லாமே காமம்தான். இதை உங்கள் பார்ட்னருடன் வளர்த்துக்கொள்ளுங்கள். உடலுறவு இனிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மருந்துகளில் கவனம்..

நம் உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்காக நாம் சில மருந்துகளை எடுத்துபதுண்டு. இதனாலும் நம் படுக்கையறை வாழ்க்கை பாதிக்கலாம். அதனால் என்ன மருந்து எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை. அதே சமயத்தில் உடலுறவினை வளர்த்துக்கொள்வதற்கு என்றும் தனியாக மருந்துகள் எடுத்துக்கொண்டால், அதிலும் கவனம் தேவை.

உடற்பயிற்சி:

உடலில் உள்ள ஹார்மோன்களை தூண்டி விடுவதற்கு சிறிதளவில் உடலுக்கு உழைப்பு கொடுப்பதும் அவசியம். நல்ல படுக்கையறை சுகத்திற்கு, உங்கள் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இது, கண்டிப்பாக பலன் அளிக்கும் என சில மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment