உடலுறவின்போது சட்டென்று சோர்வடைகிறீர்களா? அதற்கு என்ன காரணம்?

by Lankan Editor

ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை பழக்கங்களும் தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கைக்கு ஒரு பெரிய இடையூறாக அமைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சில உணவுகளை உண்பது அவர்களின் உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்கள் துணையுடன் உணர்ச்சி ரீதியான பிணைப்பை வளர்ப்பதில் உடலுறவுக்கு பெரிய பங்கு உண்டு. மேலும் இது உங்கள் பிணைப்பை பலப்படுத்துகிறது. ஆனால் சில நேரங்களில் சோர்வு, வேலை அல்லது மன அழுத்தம், அந்த அருமையான தருணங்களை அனுபவிக்க விடாது தடுக்கிறது. அதன் தாக்கம் உறவிலும் காணப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தவறான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் உடலுறவில் சோர்வை ஏற்படுத்தும். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், பலர் இதற்கு மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது நிலைமையை மோசமாக்குகிறது, நிபுணர்களின் கூற்றுப்படி.. சில உணவு வகைகள் உங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்கும். நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடவும் உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, மேலும் உடலின் அனைத்து செயல்பாடுகளும் சரியாக செயல்பட உதவுகிறது. இதயம், நரம்புகள் மற்றும் தசைகள் சரியாக செயல்பட உதவுகிறது. ஆண்களின் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மைக்கும், பெண்கள்  உச்சக்கட்டத்தை அடைவதற்கும் இந்த காரணிகள் அனைத்தும் அவசியம்.

கீரை

சில ஆய்வுகளின்படி, கீரையில் ஃபோலேட் அதிகம் உள்ளது, இந்த ஃபோலேட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. அதேபோல கீரையில் மெக்னீசியமும் உள்ளது. இது உடலில் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுகிறது. இது தம்பதிகள் இருவரையும் மேலும் உற்சாகப்படுத்தும். அவர்கள் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உதவும்.

பூசணி விதைகள்

தேசிய மருத்துவ நூலகத்தின் கூற்றுப்படி, பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்ட உதவுகின்றன. ரசாயன அடிப்படையிலான மருந்துகளைப் போலல்லாமல், பூசணி விதைகள் எந்த பக்க விளைவுகளையும் காட்டாது. இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால் செக்ஸ் ஸ்டாமினா அதிகரிக்கிறது. வறுத்த பூசணி விதைகளை காலை உணவாககூட சாப்பிடலாம்.

Related Posts

Leave a Comment