உடனே முடிகிறதா உடலுறவு… டாக்டர்கள் சொல்லும் டிப்ஸ்…

by Lifestyle Editor

ஒருவேளை நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவது பிடித்திருந்தால் அதற்கு எப்படியெல்லாம் தயார் ஆகலாம். மருத்துவர் கூறும் முக்கிய டிப்ஸ்கள் சில…

முதலில் உங்களால் உடலுறவில் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதை அறிய உங்கள் உடலைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கவேண்டும் என்கிறார் மருத்துவர்.

ஆணுறை உபயோகிப்பது பாதுகாப்பானது மட்டுமில்லை உடலுறவை நீண்ட நேரம் நீட்டிக்க வைக்கும் சீக்ரெட் வெப்பனும் கூட என்கிறார் மருத்துவர்.குறிப்பாக கொஞ்சம் தடிமனான ஆணுறையை உபயோக்கிக்கலாம் என்பது அவர் அட்வைஸ்.

செக்ஸ் வைத்துக்கொள்ளும் இடத்தை மாற்றலாம். படுக்கையறையில்தான் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்றில்லை. இடத்தை மாற்றுவதால் புதிய இடம், புதிய சூழல் என்கிற சுவாரசியம் கூடும். உடனடியாக உடலுறவை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணமும் குறையும்.

கராத்தே போன்ற தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்ளலாம். கராத்தே அல்லது ஜூஜிட்ஸூ போன்ற தற்காப்பு கலைகள் உடலுறவு சமயத்தில் முடிக்கவேண்டுமே என ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

கிடைத்த சற்று நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் உடலுறவுக்கு என்று தனியே நேரம் ஒதுக்கச் சொல்கிறார் மருத்துவர்.

உடலுறவு என்றாலே அது பிறப்புறுப்புகள் சம்பந்தப்பட்டது மட்டும்தான் என்கிற எண்ணத்தை மாற்றச் சொல்கிறார் மருத்துவர். உதாரணத்துக்கு, முத்தமிட்டுக்கொள்வது, ஒருவருக்கு ஒருவர் மசாஜ் செய்வது போன்றவையும் உடலுறவில் சுவாரசியத்தைக் கூட்டும்.

தியானப்பயிற்சியும் மூச்சுப்பயிற்சியும் செய்வது கூட உடலுறவில் பொறுமையைக் கையாள உதவும் என்கிறார்.

உங்கள் இன்பத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல் உங்கள் பார்ட்னருடைய இன்பத்திலும் கவனம் செலுத்தலாம்.

ஒரு சமயத்தில் ஒரேயொருமுறைதான் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை, உச்சம் அடைவது போன்ற உணர்வு ஏற்பட்டால் சிறிது நேர இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கலாம் என்கிறார்.

படுக்கையறையில் அதுவரை நீங்கள் முயற்சி செய்யாத புதிய ஒன்றை முயற்சி செய்யலாம். உதாரணத்துக்கு புதிய செக்ஸ் பொஷிசன் அல்லது பார்ட்னருக்குப் பிடித்ததைப் பற்றிப் பேசுவது இப்படி எதையாவது… இதனால் உடலுறவிலும் மனதளவிலும் ஒருவர் மீது ஒருவருக்கு சுவாரசியம் கூடும் என்பது அவர் அட்வைஸ்…

Related Posts

Leave a Comment