வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்..

by Lifestyle Editor

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

2024ம் ஆண்டின் முதல் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுகளை ஆய்வு செய்வதற்கான XPoSat உள்ளிட்ட 11 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் “எக்ஸ்போசாட்” செயற்கைக்கோளை சுமந்து சென்றது.

நிறமாலை, தூசு, கருந்துளை, வாயுக்களின் மேகக்கூட்டமான “நெபுலா” குறித்து ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் மொத்தம் 11 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 60வது வெற்றிப் பயணம் இதுவாகும்.

Related Posts

Leave a Comment