228
பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
அதன்படி இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்டு துருவப்பகுதிகளான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவை ஆய்வு செய்ய உள்ளது.
இந்த திட்டத்திற்காக 2 நவீன ரக செயற்கைகோள்களை இந்த மாதம் இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட்டு துருவ பகுதிகளின் மேல் உள்ள புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
இதன்மூலம் உலகின் கடல்நீர் மட்டம் உயர்வு, வானிலை மாற்றம் மற்றும் பனிக்கட்டிகள் உருகுதல் எத்தைகய விளைவுகளை அளிக்கக்கூடும் என்பதற்கான கணிப்புகளை அவர்கள் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.