குடும்பமே சேர்ந்து மருமகளை கொலை செய்ய முயற்சி செய்த காட்சி.. மாமியார் கொடுமை இப்படியா

by Column Editor

மாமியார் – மருமகள்

மாமியார் மருமகளுக்குள் எப்போவுமே பிரச்சனை என பலரும் புலம்பி கேட்டு இருக்கிறோம். அதை சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் காட்டப்பட்டு வருகிறது.

தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எல்லைமீறிய மாமியார் கொடுமைகளை பார்த்து வருகிறோம். ஆனால், உலகத்தில் உள்ள அனைத்து மாமியாருக்கும், மருமகளுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் வட இந்தியாவில் மாமியார் மருமகள் இருக்கிறார்கள்.

ஷாக்கிங் வீடியோ

அதுவும் நிஜத்தில் அல்லது சீரியலில் தான். ஆம், வட இந்தியாவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் மருமகளை மாமியார் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

உடனே அந்த மருமகள் ரோலிங்கில் சென்று ஒரு துணியை தன்னுடைய கழுத்தில் சுற்றி கொண்டு, எதோ மாமியார் அடித்ததால் தான் இப்படி ஆனது, என் உயிர் போகிறது என்பது போல் ஒரு ஆக்டிங் செய்கிறார்.

அந்த மருமகளின் உயிரை காப்பாற்ற வீட்டில் உள்ள அனைவரும் போராடுகிறார்கள். இறுதியில் ஒருவர் கத்திரிக்கோலை வைத்து துணியை வெட்டி மருமகளை காப்பாற்றி விடுகிறார்.

ஏன்டா சும்மா ஓரமா தொங்கிகிட்டு இருந்த துணிய புடிச்சு கழுத்துல சுத்திகிட்டு சாவுறதுபோல அந்த பொண்ணு நடிக்கிது, இத ஒரு காட்சியவே வேற எடுத்து வெச்சிருக்கீங்க, இதுக்கு ஒரு பரபரப்பு பின்னணி இசை வேற. இதுக்கு நாங்க பெட்டர் என கூறி தமிழ் சீரியல் ரசிகர்கள் கமன்ட் செய்து வருகிறார்கள்.

இதை பார்க்கும் போது வடிவேலு சொல்வது போல் ’கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா’ என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

Related Posts

Leave a Comment