பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகும் ஸ்டார் நடிகர்..

by Column Editor

பிக் பாஸ்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமல் ஹாசன் விலகப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிக் பாஸ் 7வது சீசன் தான் கமல் ஹாசனின் இறுதி சீசனாக இருக்கும் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

ஒரு வேளை கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் வேறு எந்த நடிகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

கமல் ஹாசனுக்கு பதிலாக இவரா

ஏற்கனவே ஒரு முறை இந்த நிகழ்ச்சியில் சிம்பு தொகுத்து வழங்கிய நிலையில், மீண்டும் அவரே பிக் பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவார் என ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது.

மற்றொரு புறம் அனைவரும் ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு நடிகரின் பெயரை ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான். ஆம், நடிகர் சரத்குமார் பிக் பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

இன்னும் சில நட்சத்திரங்களின் பெயர்களை கூட ரசிகர்கள் அசைபோட்டு வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் கமல் விழுகிறாரா? இல்லையா? அப்படி அவர் விலகினார் வேறு யார் பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்குவார் என்று.

Related Posts

Leave a Comment