எதிர்நீச்சல் குணசேகரனின் சம்பளம் மாதம் இத்தனை லட்சமா?

by Lifestyle Editor

கோலங்கள் சீரியலுக்கு பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். 2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, வேல ராமமூர்த்தி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.

இதில் மூத்த அண்ணனாக முதலில் நடிகர் மாரிமுத்து நடித்துவந்த நிலையில் அவர் உயிரிழந்ததை அடுத்து நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

இவர் பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும், வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலேயே நடித்தாலும், அதில் சம்பளம் இவருக்கு மிகவும் குறைவு என கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment