உருளைக்கிழங்கு வறுவல்…

by Lifestyle Editor

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
சீரகம் – 1 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உருளை கிழங்கு – 4 (பெரியது – 3/4 பதத்தில் வேக வைத்தது)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை 5 நிமிடம் வதக்கி அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், பச்சை மிளகாய், கடுகு, கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் அதன் பிறகு தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாடை போகும் வரையில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்றவற்றை சேர்த்து கிளறி விட்டு, தண்ணீர் விட்டு 3 முதல் 4 நிமிடங்கள் வரையில் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு வெந்தய இலை பொடி, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் ஏற்கனவே வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை அதில் போட்டு, மசாலா நன்றாக சேரும் வரையில் கிளறி வேக வைத்து, அதன் பிறகு இறக்கி வைக்கவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

Related Posts

Leave a Comment