இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறும் முக்கிய போட்டியாளர்…

by Lifestyle Editor

இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறும் போட்டியாளர் தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் 7

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

வெளியேறும் முக்கிய போட்டியாளர்:

இந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸை விட்டு பிராவோ, அக்ஷயா இருவரும் வெளியேறினார்கள். இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில் 8 போட்டியாளர்கள் சிக்கியுள்ளனர்.

அதன்படி விசித்ரா, தினேஷ், பூர்ணிமா, மணி, கூல் சுரேஷ், அனன்யா, விக்ரம், ஜோவிகா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் தற்போது குறைவான வாக்குகள் பெற்று ஜோவிகா மற்றும் விக்ரமன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். இதில் கண்டிப்பாக விக்ரமனை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் முயற்சி செய்து வருகின்றார்கள்.

Related Posts

Leave a Comment