கமல் விலகல், பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி தொகுக்கப்போவது இவரா?

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய நிகழ்ச்சி, பிக் பாஸ்.

முதல் சீசனில் தொடங்கி தற்போது 5வது சீசன் வரை உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய கமல் ஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக டுவிட்டர் வழியாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் கமல், எவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் கமல் இடத்தை தனது மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக, ஸ்ருதி தொகுத்து வழங்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment