‘சிறுமி என்பதால் யாரும் சப்போர்ட் பண்ணல’.. அனிதா சம்பத்தை உசுப்பேற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி !

by Column Editor

அடுத்தடுத்து போட்டியாளர்களின் டைலை உடைக்கும் புதிய டாஸ்க்கின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இனிமேல் தான் களைகட்ட உள்ளது. அதற்கான அடுத்தடுத்த டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் பிரச்சனை ஏற்பட்டு போட்டியாளர்கள் விளையாடி நிலையில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அது குறித்த முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், நீ அதற்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்ற புதிய டாஸ்க் ஒன்றை சினேகன் வாசிக்கிறார்.போட்டியாளர்கள் புகைப்படம் பதிந்திருக்கும் 10 டைட்டில்ஸ்-கள் கொண்ட போர்டுகள் ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனி வைக்கப்பட்டிருக்கிறது.

தலைவர் போட்டிக்கு பங்குபெறாத மற்ற ஹவுஸ்மேட்டுகள், தலைவர் போட்டியில் பங்குபெறும் நபர்களில் யார்யார் தலைவராக இருக்க சரிபட்டு வரமாட்டார்கள் என்ற அடிப்படையில் இரண்டு நபர்களை தேர்வு செய்து அந்த இரண்டு போட்டியாளர்கள் புகைப்படம் இருக்கும் டைலை உடைக்கவேண்டும் என்ற விதி கொடுக்கப்படுகிறது.

இந்த டாஸ்க்கின்படி கார்டன் ஏரியாவில் உள்ள இடத்தில் டைல்ஸ் போர்டுகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. முதலில் தலைவராக பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, அனிதா சம்பத் ஆகியோர் டைல்ஸ் பக்கத்தில் நிற்கின்றனர். இதையடுத்து தலைவர் போட்டியில் பங்கேற்காத மற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவராக டைல்சை உடைக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment