பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மந்தமான வளர்ச்சியை எட்டும்: OBR கணிப்பு

by Lifestyle Editor

பணவீக்கம் குறைய அதிக நேரம் எடுக்கும் என்பதால், பிரித்தானிய பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட மிக மெதுவாக வளரும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2027-28ஆம் ஆண்டு வரை வாழ்க்கைத் தரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று வரவு செலவு திட்டத்துக்கு பொறுப்புக்கான அலுவலகம் (OBR) தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு இரண்டு வகையான பொருளாதார முன்னறிவிப்புகளை வெளியிடும் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமான இயங்கும் வரவு செலவு திட்டத்துக்கு பொறுப்புக்கான அலுவலகம், அரசாங்க நிதிகளுக்கு என்ன நடக்கும் என்று கணிக்க வழிவகுக்கின்றது.

இவை என்ன நடக்கும் என்பது பற்றிய சிறந்த யூகத்தின் அடிப்படையில் அமைந்தவை, மேலும் அவை மாற்றத்திற்கு உட்பட்டவை.

கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, பிரித்தானியா, இந்த ஆண்டு 0.6 சதவீதம் வளர்ச்சியடையும். கடந்த இலையுதிர்காலத்தில் பொருளாதாரம் மந்தநிலையில் விழுந்து சுருங்கும் என்று கணித்ததை விட கணிசமாக சிறப்பாக இருக்கும்.

இருப்பினும், இது அதன் வளர்ச்சிக் கண்ணோட்டத்தை 2024 இல் 0.7 சதவீதம் ஆகவும், 2025 இல் 1.4 சதவீதம் ஆகவும் குறைத்தது. முந்தைய கணிப்பான 1.8 சதவீதம் மற்றும் 2.5 சதவீதத்தில் இருந்து குறைந்தது.

Related Posts

Leave a Comment