273
			
				            
							                    
							        
    ஃபேசியல் என்பது தற்போது கெமிக்கல் கலந்த பொருட்களினால் செய்யப்பட்டு வருவதால் சில சமயம் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் துளசி போன்ற இயற்கையான பொருட்களை வைத்து ஃபேசியல் செய்தால் எந்தவித பக்க விளைவும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
துளசி இலையில் ஆன்ட்டி செப்டிக் தன்மை இருப்பதால் அது சரும பிரச்சனைகளை தடுப்பதோடு முகத்தில் முகப்பருக்கள் தழும்புகள் இல்லாமல் செய்துவிடும். துளசி இலையை நன்றாக அரைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து 15 நிமிடம் முகத்தில் பூச வேண்டும் அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்
வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் இதனால் எந்த விதமான பக்க விளைவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
