தலைமுடி நல்லா இயற்கையான முறையில் அடர்த்தியா வளர..

by Lifestyle Editor

உங்களுடைய மயிர்கால்கள் வலுவிழந்து காணப்பட்டால் அது உங்களின் தலைமுடி வளர்ச்சியை பாதிக்கலாம். உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய முடி பராமரிப்பு ப்ராடக்டுகளில் அதிக கெமிக்கல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது ஒரு வழி. மயிர்கால்களை இயற்கையான முறையில் வலிமையாக மாற்றுவதற்கு உதவும் ஒரு சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

மயிர்கால்கள் வலுவிழந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்…

*ஹார்மோன் சீர்குலைவு
*ஊட்டச்சத்து குறைபாடு
*அதிகப்படியாக ஹீட் ஸ்டைலிங் சாதனங்களை பயன்படுத்துவது
*மோசமான கெமிக்கல் சிகிச்சைகள்
*மன அழுத்தம்

மயிர்கால்களை வலுவாக்க நீங்கள் செய்ய வேண்டியவை: ஆரோக்கியமாக சாப்பிடவும் : சரிவிகித உணவு குறிப்பாக புரோட்டீன் நிறைந்த உணவு தலைமுடியின் வளர்ச்சியை பல்வேறு வகையில் ஊக்குவிக்கிறது. புரோட்டின் அதிலும் கெரட்டின் தலைமுடியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து மயிர்க்கால்களை வலுவாக மாற்றுகிறது. வைட்டமின் B7, இரும்புச்சத்து மற்றும் சிங்க் போன்றவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.

மயிர் கால்களுக்கு மசாஜ் :

மயிர் கால்களை நீங்கள் மசாஜ் செய்வதால் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. இது தலைமுடிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதனால் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைக்கிறது. தினமும் 4 நிமிடங்கள் மயிர்க்கால்களை மசாஜ் செய்வதால் தலை முடி தடினமாகவும், வலிமையாகவும் மாறும் என்று 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

கற்றாழை :

கற்றாழை சரும ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நம்மில் பலர் அறிவோம். ஆனால் இது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் எக்கச்சக்கமான பலன்களை வழங்கவல்லது. அதன் இயற்கையான ஆற்றும் தன்மை மற்றும் ஈரப்பத பண்புகள் மயிர் கால்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வறட்சியிலிருந்து விடுபட உதவுகிறது. கற்றாழை இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு தலை முடியை எப்பொழுதும் ஈரப்பதத்தோடு வைத்திருக்கிறது.

சரியான நீரேற்றம் :

தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள். தலைமுடி செழித்து வளர்வதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து அவசியம். போதுமான அளவில் நீர்ச்சத்து கிடைத்தால் மட்டுமே அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் மயிர்கால்களை எளிதில் சென்றடைய முடியும்.

இது தவிர தலைமுடியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்கவும். இது உங்களுடைய தலைமுடி மற்றும் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

Related Posts

Leave a Comment