ஹீரோயின் மாதிரியாக சமையலறையில் உள்ள இந்த ஒரே ஒரு பொருள் போதுமாம்!

by Column Editor

நம் சருமத்தைப் பராமரிப்பதற்காக பல நவீன வழிகளை நாடுகிறோம்.

அதிகமாக காசு கூட செலவு செய்கின்றோம்.

ஆனால், முகத்தை சுத்தம் செய்து இயற்கையாக பளபளக்க உதவும் அற்புத பொருட்கள் இன்று உங்கள் சமையலறை அலமாரியில் எளிதாகக் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு:

கருமையை போக்கும் சக்தி உருளைக்கிழங்கு உண்டு. ஒரு கிண்ணத்தில் ஒரு நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கை வெட்டி சாறு எடுத்துக்கொள்ளவும்.வட்ட இயக்கத்தில் உங்கள் முகம் மற்றும் கழுத்தில் அந்த சாறை தடவி மசாஜ் செய்யவும். 10-15 நிமிடங்கள் (அது காய்ந்து போகும் வரை) விட்டு, அதை கழுவவும்.

தேன்:

மென்மையான, பனி மற்றும் புதிய தோற்றமுடைய தோலுக்கு தேன் உதவும். அரை டீஸ்பூன் தேனை எடுத்து ஈரமான தோலில் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பால்:

பாலில் ஊறவைத்த பருத்தி உருண்டையை நனைத்து முகத்தில் தடவவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், துளைகளை அடைக்கவும் உதவுகிறது.

தக்காளி:

தக்காளியை இரண்டாக நறுக்கி, முகம் முழுவதும் மெதுவாகத் தேய்க்கவும். 5-10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், முகத்தை கழுவவும். மென்மையான மற்றும் அழகான தோற்றமுடைய சருமத்தைப் பெற தினமும் இதை முயற்சி செய்யவும்.

Related Posts

Leave a Comment