போர் நிறுத்தம் கோரி அமெரிக்காவில் போராடிய 300 பேர் கைது!

by Lankan Editor

இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும்  போரை நிறுத்துமாறு அமெரிக்காவில் போராடிய 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி அமெரிக்கா தலைநகர் வொஷிங்டனில் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கேனான் ரோட்குண்டா பகுதியை  முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்  போரை நிறுத்தும்படி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தை நோக்கிச்  சென்றனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் அவர்களை கலைந்து போகுமாறு  அறிவுறுத்தினர். எனினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். அந்தவகையில் சுமார் 300 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது

Related Posts

Leave a Comment