புதிய திருப்பத்தை நோக்கி நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்: நெஞ்சைப் பதற வைக்கும் தருணம்!

by Editor News

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனம், உண்மையை அறிந்து மொத்தக் குடும்பத்திடமும் இருந்து மறைக்கப்படும் உண்மை.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்தக் கதையில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டார்கள். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாக பிரிந்து எல்லோரும் தனித்தனியே இருந்த நிலையில் ஜீவா – மீனாவைத் தவிர மற்ற அண்ணன்கள் எல்லாம் வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

தனத்தின் வியாதியால் புதிய திருப்பம்

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ காட்சியில்,

தனத்திற்கு இருக்கும் மார்பக புற்று நோய் இரண்டாம் கட்டத்தில் இருப்பது டெஸ்ட் ரிசல்ட் உறுதி செய்தார் மருத்துவர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனம் நா இல்லாமா மாமா எப்படி இருக்கப்போகிறார் என்று மீனாவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மீனாவும் தனமும் உங்களுக்கு இருக்கும் வியாதி பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று சொல்ல தனக்கு இப்படி ஒரு வியாதி இருப்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் தெரிந்தால் யாரும் தாங்க மாட்டார்கள் என்று மறைக்கப் பார்க்கிறார்கள்.

Related Posts

Leave a Comment