இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகிவிடுகிறேன்.. லியோ கதாநாயகி திரிஷா எடுத்த முடிவு

by Lifestyle Editor

திரிஷா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இப்படத்தை தொடர்ந்து மனசெல்லாம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்த இரு திரைப்படங்களுக்கு பின் திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் தான் சாமி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை திரிஷாவிடம் செய்தியாளர் ஒருவர் அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து வருகிறீர்களே? இப்படம் உங்களுக்கு வெற்றியை தேடி தருமா என்பது போல் கேள்வி எழுப்பினார்.

திரிஷா எடுத்த முடிவு

இதற்கு பதிலளித்த திரிஷா, இந்த படம் மட்டும் ஓடவில்லை என்றால், நான் சினிமாவிற்கு இருந்து விலகிவிடுகிறேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷாவின் எந்த அளவிற்கு துணிச்சலாக இதை கூறினாரோ, அதே போல் இப்படமும் மாபெரும் வெற்றியை அவருக்கு தேடி தந்தது. இதன்பின் 20 ஆண்டுகள் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment