திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் சரத்பாபு …

by Lifestyle Editor

சரத்பாபு :

தெலுங்கில் 1973ம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் சரத்பாபு. பின் 1977ம் ஆண்டு பட்டிய பிரவேசம் என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பிறகு அவர் ஹீரோவாக பல படங்கள் நடித்தாலும் சரியாக ஹிட் பார்க்கவில்லை, எனவே இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார்.

ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள சரத்பாபு சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மருத்துவமனையில் பிரபலம் :

71 வயதாகும் சரத்பாபு சினிமாவில் நடிப்பதை விட்டு ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்தார்.

திடீரென உடற்நலக் குறைவு ஏற்பட தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல்நிலை குறித்து சரியாக தகவல் எதுவும் தற்போது வரை வரவில்லை.

Related Posts

Leave a Comment