247
இன்றைய எபிசோடில் பாக்யாவின் நண்பர் பழனிச்சாமி வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி வீட்டுக்குள் வர, அவரை பழனிச்சாமி தடுத்து நிறுத்துகிறார்.
“சேல்ஸ்மேன் என்றால் வாசலிலேயே நிற்க வேண்டும். இப்படி நேராக உள்ளே போவீங்களா. சோப்பு, சீப்பு விக்குறீங்களா” என கேட்டு அசிங்கப்படுத்துகிறார். கோபியும் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றுவிடுகிறார்.
அதன் பின் தான் கோபி யார் என்கிற உண்மையை பழனிச்சாமியிடம் மற்றவர்கள் கூறுகின்றனர். அவர் மன்னிப்பு கேட்டுவிடவா என கேட்க, வேண்டாம் என அவரை தடுத்துவிடுகின்றனர். கோபி தனது அறைக்கு சென்று கோபத்தில் கொந்தளிக்கிறார்.
ஆரம்பமே இப்படி என்றால் இனி கோபி மற்றும் பழனிச்சாமி இடையே அதிகம் மோதல்கள் நடப்பது போல தான் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.