இராஜ புஜங்காசனம்

by Lifestyle Editor

செய்முறை

விரிப்பில் குப்புறப்படுக்கவும். உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் தரையில் வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்பு வரை உடலை உயர்த்தவும். கைகள் வளையாமல் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றவும். தோள்களை விரிக்கவும். உள்ளங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றியவாறு கால்களை மடித்து பாதங்களைத் தலையை நோக்கி கொண்டு வரவும். மூச்சை உள்ளிழுத்தவாறு முதுகை நன்றாகப் பின்னால் வளைத்துத் தலையை பின்புறம் சாய்த்து பாதங்களின் மேல் வைக்கவும். 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். மெதுவாகக் கால்களைக் கீழிறக்கி, மேலுடலையும் கீழிறக்கி ஆரம்ப நிலைக்கு வரவும்.

தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தீவிர இடுப்புப் பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம், வயிற்றுப் புண் அல்லது குடலிறக்கம் உள்ளவர்கள் இராஜ புஜங்காசனத்தைத் தவிர்க்கவும்.

பலன்கள்

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இருதய இயக்கத்தைச் செம்மையாக்குகிறது. நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது. தோள், கழுத்து மற்றும் மணிக்கட்டைப் பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்பு, வயிறு, தொடை ஆகிய பகுதிகளில் உள்ள அதிக சதையைக் குறைக்கிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் சீராக வைக்கிறது.அசதியைப் போக்குகிறது. மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்கிறது.

Related Posts

Leave a Comment