ஊட்டியில் ஒருநாளில் சுற்றி பார்த்து மகிழ டாப் 5 சுற்றுலாதலங்கள் ..

by Lifestyle Editor

1) தாவரவியல் பூங்கா (Botanical Garden)

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வது அரிது. இந்த பூங்காவில் பல்வேறு வெளிநாட்டு மரங்கள், செடிகள், கொடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா மிகவும் அமைதி நிறைந்து காணப்படுகிறது. உதகைக்கு சொந்த வாகனங்களில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் முதலில் பார்க்க ஏதுவான இடம் உதகை சேரிங்கிராஸ் பகுதியின் அருகே அமைந்துள்ளது இந்த பூங்கா. எனவே, சுற்றுலா பயணிகள் முதலில் பார்த்து ரசித்துவிட்டு பின்னர், மற்ற சுற்றுலாதலங்களுக்கு செல்லலாம்.

2)தொட்டபட்டா மலை சிகரம் (Doddabetta Peak)

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலை சிகரத்திற்கு தாவரவியல் பூங்காவிலிருந்து உதகை கோத்தகிரி சாலையில் செல்ல வேண்டும். கோத்தகிரி சாலையில் டீ போக்ட்ரி வழியாக சென்று இங்கு அடையலாம். இங்கே சுற்றி பார்த்து மகிழ அழகிய காட்சிகள் காத்துக்கிடக்கின்றன. மேலும்,உதகை நகரின் காட்சியை இங்கு இருக்கு தொலைநோக்கி மூலம் காணலாம் மற்றும் குழந்தைகளுடன் செல்வேர் சற்று அருகே உள்ள தேயிலை பூங்கவையும் கண்டு மகிழ்ந்து வரலாம். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குடும்பத்தோடு சென்று விளையாடி மகிழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது தேயிலை பூங்கா.

3) உதகை ரோஸ் கார்டன் (Rose Garden)

தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து, உதகை பழைய அலங்கார் தியோட்டர் சாலையில் வழியாக இந்த ரோஜா தோட்டத்திற்கு வரலாம். இங்கே ஏராளமான ரோஜா மலர்களை பார்த்து ரசிக்கமுடியும்.

4) ஊட்டி படகு இல்லம் (Ooty Boat House)

இங்கே, குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் இருக்கினறன. மேலும், படகு சவாரி செய்யும் வசதியும் இருப்பதால், இந்தபடகு பயணம் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஊட்டிக்கு பேருந்து மற்றும் மலை ரயிலில் வரும் சுற்றுலா பயணிகள் முதலில் இந்த படகு இல்லத்தை பார்த்துவிட்டு மற்ற இங்களுக்குச்செல்வது மிக சுலபமாக இருக்கும். ஏன் எனில் படகு இல்லம் உதகை மத்திய போருந்து நிலையம் காந்தள் சாலையில்தான் அமைந்துள்ளது.

5) ஊட்டி கர்நாடகா பார்க் (Karnataka Siri Horticulture Garden)

கடைசியாக படகு இல்லத்தில் இருந்து அருகே அமைந்துள்ள இந்த கர்நாடகா பூங்காவுக்கு வரலாம். புதிதாக தொடங்கப்பட்ட இந்த சுற்றுலாதலம், கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது படகு இல்லத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த பூங்காவில் உலாவி மகிழ்ந்து உங்களின் ஒரு நாள் பயணத்தை முடித்துக்கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment