ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1500 : பாகிஸ்தானில் கடும் தட்டுப்பாடு

by Lifestyle Editor

பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை மாவு 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கோதுமை மாவு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஒரு கிலோ கோதுமை மாவு ஆயிரத்து 500 ரூபாய் வரை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாகவும் கோதுமை வாங்க வரிசையில் காத்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது .

கடந்த ஆண்டு போதுமான கோதுமையை பாகிஸ்தான் அரசு இருப்பு வைத்து கொள்ளாமல் இருந்தது தான் தற்போது பாகிஸ்தானில் கோதுமை பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment