பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா ?

by Lifestyle Editor

சர்வதேச அளவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை 74 அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஜூன் மாதம் 118 டாலர் என்ற உச்சத்தை தொட்டது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். தமிழ் நாடு உள்ளிட்ட 6 மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து விலை நிலவரம் குறித்த விளக்கம் அளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி “நவம்பர் 2020-க்கும், நவம்பர் 2022-க்கும் இடைப்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலை 102 சதவீதம் உயர்ந்ததாக தெரிவித்தார்.

2020 நவம்பரில் 43.34 அமெரிக்க டாலராக ஆக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை2022 நவம்பரில் 87.55 அமெரிக்க டாலராக உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த காலத்திலும் இந்தியாவில் பெட்ரோல் விலையில் 18.95 சதவீதமும், டீசல் விலையில் 26.50 சதவீதமும் மட்டுமே உயர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள், 2022-23 நிதி ஆண்டில் 27 ஆயிரத்து 276 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தாகவும் ஹர்திப் சிங் புரி தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், மத்திய அரசு இருமுறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததாக தெரிவித்தார். பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ் நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியை குறைக்காததால் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், தங்கள் மாநிலங்களில் வாட் வரியை குறைக்க மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மற்ற நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக உள்ளதால், அவற்றின் விலையை குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சர்வதேச அளவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை 74 அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஜூன் மாதம் 118 டாலர் என்ற உச்சத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து 5 மாதங்களாக கடுமையான சரிவை கண்டு வருகிறது எனினும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 76 அமெரிக்க டாரல்களாக வீழ்ச்சி அடைந்துள்ளது ஆனாலும் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 100 ரூபாயையும் டீசல் விலை 94 ரூபாய் தாண்டி விற்பனையாகிறது .

Related Posts

Leave a Comment