பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க- சீன ஜனாதிபதிகள் இன்று சந்திப்பு!

by Lankan Editor

அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (திங்கட்கிழமை) இந்த பேச்சுவார்தை இடம்பெறவுள்ளது.

உலகின் முன்னணி பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு பாலியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இதில் கலந்துகொள்வதற்காக பாலி வருகை தரும் நிலையில், இவர்கள் பேச்சுவார்தை நடத்தவுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை அவர் நேரில் சந்தித்துப் பேச இருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 5 முறை காணொளி, தொலைபேசி வாயிலாக அவர்கள் உரையாடியுள்ளனர்.

பருவநிலை மாற்றம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக போர், கொவிட் தொற்றுப் பரவல், தாய்வான் விவகாரம், உள்ளிட்டவையால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளின் ஜனாதிபதிகள் சந்தித்துப் பேசவுள்ளது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment