வேல்ஸில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பது சட்டவிரோதமானது!

by Column Editor

வேல்ஸில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பது இன்று (திங்கட்கிழமை) முதல் சட்டவிரோதமானது.

‘குழந்தைகளுக்கு இது ஒரு வரலாற்று நாள்’ என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வேல்ஸ் உடல் தண்டனையை தடை செய்யும் இரண்டாவது பிரித்தானிய நாடாகிறது.

தங்கள் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை யாரேனும் அடித்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்காக வழக்குத் தொடரப்படலாம்.

2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்கொட்லாந்து சட்டவிரோதமான முதல் பிரித்தானிய நாடாக மாறுவதற்கு முன்பு, ஏப்ரல் 2020ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தீவுகளின் முதல் பகுதியாக ஜெர்சி இருந்தது.

1979ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை தடை செய்த உலகின் முதல் நாடாக சுவீடன் ஆனது. இப்போது உலகம் முழுவதும் 63 நாடுகளில் இது சட்டவிரோதமானது.

Related Posts

Leave a Comment