பருவநிலை மாற்றத்தை கண்காணிக்க உதவும் புதிய செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளது பிரித்தானியா

by Lifestyle Editor

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகளை கண்காணிக்க உதவும் வகையில் பிரித்தானியாவின் நிதியுதவியில் கீழ் புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்படவுள்ளது.

அதன்படி அட்லாண்டிக் விண்மீன் திட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுடன் ஒன்றிணைந்து இது பூமியை கண்காணிக்க செயற்கைக்கோள்களின் குழுவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி புதிய பத்ஃபைண்டர் செயற்கைக்கோளுக்கு பிரித்தானிய விண்வெளி நிறுவனம் 3 மில்லியன் பவுண்டகளை வழங்கியுள்ளது.

இந்த புதிய செயற்கைக்கோளானது மதிப்புமிக்க மற்றும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தரவை வழங்கும் என பிரித்தானிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது இயற்கை பேரிடர்களை கண்டறியவும், கண்காணிக்கவும் மற்றும் குறைக்கவும் உதவும் என பிரித்தானிய விண்வெளி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment