பாக்யா செய்த விஷயம்.. உச்சகட்ட அதிர்ச்சியில் கோபி! பாக்கியலட்சுமி ப்ரோமோ…

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மனைவிக்கு தெரியாமல் அவரை விவாகரத்து செய்ய முயற்சி செய்து வருகிறார். விவாகரத்து முடிந்தபிறகு ராதிகாவை திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறார்.

கோபி:

கடந்த வார எபிசோடுகளில் கோபி ராதிகா வீட்டில் இருக்கும் நேரத்தில் அங்கு பாக்யா வந்துவிடுகிறார். அப்போது என்ன செய்வது என தெரியாமல் பதறிய கோபி வெளியில் வராமல் அறைக்கு உள்ளேயே இருந்துகொண்டார். அதன் பின் வேலைக்காரி கோபி காரை பார்த்துவிட்டு அவர்தான் ஒருவேளை ராதிகாவுடன் தொடர்பில் இருப்பவரோ என சந்தேகம் எழுப்ப அவரை இனி வேலைக்கு வர வேண்டாம் என பாக்யா சொல்லிவிடுகிறார்.

அடுத்த வார ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் செழியன் ஜெனியை விவாகரத்து செய்ய போவதாக சொல்கிறார். அதை கேட்டு கோபம் ஆகும் பாக்யா அவர் கன்னத்தில் அறைகிறார். இதை பார்த்து கோபி பதறி போகிறார். அவர் செய்த விஷயங்கள் எல்லாம் என்ன ஆகுமோ என பயத்தில் வந்த ரியாக்ஷன் அது.

ப்ரோமோ இதோ….

Related Posts

Leave a Comment