பிக் பாஸ் அல்டிமேட்டில் இன்றைய எலிமினேஷன் இவர்தான்: உறுதியான தகவல்

by Lifestyle Editor

பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு கடந்த வாரம் சிம்பு புது தொகுப்பாளராக வந்தார். அவர் போட்டியாளர்கள் எல்லோருடனும் தனித்தனியாக பேசி சர்ப்ரைஸ் கொடுத்தார். வனிதா அந்த வாரம் பாதியிலேயே கிளம்பியதால் வார இறுதி நாளில் எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கிறது. வனிதா வெளியே போனதில் இருந்து ஷோவில் அதிகம் ஈடுபாடு காட்டாமல் இருக்கும் பாலாஜி தான் இன்று எலிமினேட் ஆகிறார்.

அவர் உடல்நிலை காரணமாகவும் அதிகம் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார் என கடந்த வாரமே சொன்னது குறிப்பிடத்தக்கது. அதனால் அவருக்கு மிக குறைந்த வாக்குகளே கிடைத்து வெளியேறி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment