பிக் பாஸ்ஸில் டைட்டில் வின்னர் ஆக ஒரு கோடி கொடுத்தேனா ? பதிலடி கொடுத்த அர்ச்சனா..

by Editor News

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7, 100 நாட்களை தாண்டி முடிவடைந்து இருக்கிறது. இதுவரை நடக்காத ஒரு அதிசயமாக வைல்ட் கார்டு மூலமாக போன அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்.

அர்ச்சனா வெற்றி பெற முக்கிய காரணம் PR -bots என்றும் , பல லட்சம் செலவு செய்து தான் இந்த டைட்டில் பட்டத்தை வாங்கி இருக்கிறார் என்றும் அவர் மீது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அர்ச்சனா, “பிக் பாஸ்ஸில் வெற்றி பெற்றதற்கு 50 லட்சம் தருகிறார்கள். ஒரு ஓட்டுக்கு 1 ரூபாய் என்று வைத்தால் கூட 19 கோடி வரும். இவ்வளவு செலவு செய்து வெற்றி பெறுவது சாத்தியமா?..”

“இவ்ளோ செலவு செய்து பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வாங்குவதற்கு பதிலாக 1 கோடி வைத்து ஒரு படத்தை இயக்கி ஹீரோயினாக நடித்து விடுவேனே. நான் public response வைத்து தான் ஜெயித்தேன்” என்று அர்ச்சனா கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment