சன் டிவி ரோஜா சீரியல், ரேட்டிங்கில் தேசியளவில் உச்சம் தொட்டதா? வாயடைத்த சின்னத்திரை…

by Column Editor

சன் டிவி ஃபேன் கிளப் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இது ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

மக்களின் மனதை கவரக் கூடிய சீரியல்கள் அனைத்துமே நல்ல தரமானதாக இருக்கும். அவற்றின் கதைக்களம், சிறந்த கதாபாத்திர தேர்வு, அனுபவம் மிக்க இயக்குனர் போன்ற காரணங்களினால் அந்த சீரியல் மாபெரும் ஆதரவை பெற்று விடும். ஒரு சீரியல் சிறப்பாக நீண்ட நாட்கள் ஒளிபரப்பாக அந்த சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் மிக முக்கியமாகும். டி.ஆர்.பி ரேட்டிங் போட்டியில் பல வித சீரியல்கள் ஒன்றை ஒன்று அடிக்கடி முந்துவது பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

ஒரு சீரியலுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் என்பது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் சீரியலுக்கு, அது ஒளிபரப்பாகும் சேனலுக்கு பல வகையில் லாபம் உள்ளது. இதை எப்படியாவது அடைய வேண்டும் என்பதற்காகவே டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கு எல்லா சீரியல்களும் முயற்சி செய்யும். விஜய் டிவியின் பிரபல சீரியல்களானபாரதி கண்ணம்மா, பாக்கிலட்சுமி, ராஜா ராணி போன்றவை எப்போதும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்க கூடியவை.

இதே போன்று சன் டிவியில் ரோஜா, வானத்தைப் போல, எதிர் நீச்சல் போன்றவை டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை பெற கூடிய சீரியல்களாகும். மேலும் ஜீ தொலைக்காட்சி சேனல் மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்களின் சீரியல்களும் அவ்வப்போது முன்னிலை பெறுவது வழக்கம். இதில் பெரும்பாலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளின் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்படியாவது முன்னிலை பெற்று விடும்.

பெரும்பாலும் பல வாரங்களாக விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வந்தது. அதன் பிறகு சன் டிவியின் ரோஜா சீரியல் முன்னிலைக்கு வந்தது. இதே போன்று மற்ற தமிழ் சீரியல்களும் அவ்வப்போது முதல் இடத்தை பிடிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தேசிய அளவிலான டி.ஆர்.பி ரேட்டிங்கில் தமிழ் சீரியல் ஒன்று இடம் பிடித்துள்ளது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சன் டிவியின் டாப் சீரியலான ரோஜா தொடர் டாப் 10 இந்திய சீரியல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த தமிழ் சீரியலுக்கும் இந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. 20.32 டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று இந்த டாப் 10 வரிசையில் ரோஜா சீரியல் உள்ளது. இந்த தகவலை சன் டிவி ஃபேன் கிளப் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இது ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இந்த தகவல் நிச்சயம் மாபெரும் மகிழ்ச்சியை தர கூடும். இந்த பதிவை பலர் லைக் செய்துள்ளனர். அதே போன்று ரோஜா சீரியல் ரசிகர்கள் இது குறித்து தங்களின் கருத்துக்களை கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Related Posts

Leave a Comment