விரைவில் விஜய் டி.வி.யில் புது சீரியல்… வைரலாகும் போட்டோ!

by Column Editor

ஒவ்வொரு சீரியலையும் காண அதற்கென தனித்தனி ஆடியன்ஸ் பட்டாளமே இருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து சீரியல்களை கூட சீசன் 1, சீசன் 2 என அடுத்தடுத்த பாகங்களாக விஜய் டி.வி. ஒளிபரப்பாகி வருகிறது.

லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்ற புது, புது நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவதில் விஜய் தொலைக்காட்சி கில்லியாக விளங்குகிறது. காமெடி ஷோ தான் பிடிக்கும் என்பவர்களுக்காக அது இது எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், குக் வித் கோமாளி என விதவிதமாக இருக்கிறது. ரியாலிட்டி கேம் ஷோக்களுக்கு மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை, ஸ்டார்ட் மியூசிக், எங்ககிட்ட மோதாதே போன்ற நிகழ்ச்சிகளும், பாடல் பிரியர்களுக்காக சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. எல்லாத்தையும் விட அல்டிமேட்டாக பிக்பாஸ் சீசன் 5 முடிந்த கையோடு பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதேபோல் எல்லா சீரியலையும் ஒரே மாதிரி அழுது புலம்புவது போல் எடுக்காமல் வகை, வகையாக ஒளிபரப்பி வருகின்றனர். அண்ணன் – தம்பி சென்டிமெண்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ், அப்பா – மகள் பாசத்துக்கு ‘மெளன ராகம் 2’, கணவன் – மனைவி உறவை சொல்ல ‘ராஜா ராணி 2’, ‘பாரதி கண்ணம்மா’ என பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த ஒவ்வொரு சீரியலையும் காண அதற்கென தனித்தனி ஆடியன்ஸ் பட்டாளமே இருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து சீரியல்களை கூட சீசன் 1, சீசன் 2 என அடுத்தடுத்த பாகங்களாக விஜய் டி.வி. ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படியிருக்க விஜய் தொலைக்காட்சியில் விரைவில் புது சீரியல் ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. தனது வழக்கமான பாணியிலேயே பழைய திரைப்படமான ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரை புது சீரியலுக்கு வைத்து, ஷூட்டிங்கை தொடங்குவதற்கான முதல் நாள் பூஜையும் போடப்பட்டுள்ளது. ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் பூஜை தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொடரில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய எந்த வித தகவலும் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சி தனது வழக்கமான பாணியிலே பழைய சினிமா படமான ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரில் புதிய சீரியலை தயாரித்துள்ளது.

இந்த சீரியலில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய தகவலை விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது. புது சீரியலில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்பதை புரோமோ வீடியோக்கள் மூலமாக விரைவில் விஜய் தொலைக்காட்சி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது சீரியலின் ஒளிபரப்பு நேரம் எப்போது?, நடிகர், நடிகைகள் யாராக இருப்பார்கள்?, கதை என்னவாக இருக்கும்? என சோசியல் மீடியாவில் விஜய் டி.வி. ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment