497
சின்னத்திரையில் பிரம்மாண்ட ரியாலிட் நிகழ்ச்சியாக வலம்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற தலைப்பில் OTT-யில் ஒளிபரப்பாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.
24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிய நிலையில், இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் உறுதியான தகவல்படி சுஜா வருணி எலிமினேட் ஆகி இருக்கிறார்.
அவர் தான் கடந்த வாரம் சிறப்பாக விளையாடி தலைவர் டாஸ்கில் ஜெயித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அவருக்கு வாக்குகள் குறைந்ததால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.