கண்களுக்கு கீழே உருவாகும் கருவளையம் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தையும் தடுக்க அவசியம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

by Column Editor

கண்ணிற்கு கீழே உருவாகும் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் நல்ல தூக்கம் இல்லாமை, சீரற்ற இரத்த ஓட்டம், வைட்டமின் சி குறைபாடு போன்றவை தான்.

சருமத்தை சரிவர பாதுகாக்க ஏராளமான வழிமுறைகளை பின்பற்றுவோம். ஆனால், பல நேரங்களில் நாம் எதிர்பார்க்கும் முடிவுகளை அவை தருவது கிடையாது. அதிலும் குறிப்பாக கண்ணுக்கு கீழ் உண்டாகும் கருவளையங்கள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை பல விதங்களில் நமக்கு பாதிப்பை தரக்கூடியவை. இதை தடுக்க எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தாலே போதும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை பற்றி இந்த பதிவில் மேலும் விரிவாக பார்ப்போம்.

ஸ்கின் கிரீம் :

கண்ணிற்கு கீழே உருவாகும் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் நல்ல தூக்கம் இல்லாமை, சீரற்ற இரத்த ஓட்டம், வைட்டமின் சி குறைபாடு போன்றவை தான். எனவே இதனால் கருவளையங்கள், கரும்புள்ளிகள் வருகிறது. இதை முகத்தில் தெரியாத படி செய்ய ஸ்கின் கிரீம்கள் உதவும். ரெடினோய்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் ஹேரோலினிக் அமிலம் ஆகிய மூலப்பொருட்கள் உள்ள ஸ்கின் கிரீம்களை கண்ணிற்கு கீழே பயன்படுத்தலாம். இது நல்ல பலனை தரும்.

ஈரப்பதம் :

தேவையான அளவு ஈரப்பதம் இல்லையென்றால் இது போன்ற பாதிப்புகள் உருவாகும். எனவே நீண்ட நேரம் ஈரப்பதம் தர கூடிய கிரீம்களை நீங்கள் பயன்படுத்தி வரலாம். இது 3-6 வாரங்களிலேயே கண்ணிற்கு கீழே உருவாகும் பாதிப்புகளை தடுத்து, பொலிவான தோற்றத்தை தரும். நீங்கள் இதற்கான கிரீம்களை வாங்கும் முன் உங்களின் தோல் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசித்து கொள்வது நல்லது. ஏனென்றால் ஒவ்வொருவரின் தோலின் தன்மையும் வெவ்வேறாக இருக்கும்.

குளிர்ந்த மூலப்பொருட்கள் :

கண்ணிற்கு கீழே உள்ள வீக்கம் அல்லது கரும்புள்ளிகளை குறைக்க ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். ஒரு மென்மையான துணியில் ஐஸ் கட்டியை கட்டி வைத்து அதை கண்ணிற்கு கீழே மெதுவாக தடவலாம். குறிப்பாக ஐஸ் உருகி வரும் வரை இதை செய்தி வரலாம். இது போன்று தினமும் 20 நிமிடம் செய்து வந்தால் சிறந்த பலனை தர கூடும்.

நல்ல தூக்கம் :

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தூக்கம் என்பது மிக அவசியமானது. எனவே தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் இரவில் தூங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். போதுமான அளவு தூக்கம் இருந்தாலே கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கரும்புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவற்றின் பாதிப்பு வராது. அதே போன்று போதுமான அளவு தண்ணீரும் எடுத்து கொள்ளுங்கள். இவை இரண்டுமே இயற்கையான முறையாகும்.

Related Posts

Leave a Comment