ரஷ்ய படையெடுப்பு தொடர்பான அச்சத்துக்கு மத்தியில் உக்ரைனுக்கு விரையும் பிரதமர் பொரிஸ்!

by Column Editor

ரஷ்ய படையெடுப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், உக்ரைனுக்குச் சென்று அந்நாட்டின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மாஸ்கோவுடனான வாதங்களுக்கு

இராஜதந்திர தீர்வைக் கண்டறியவும் போரை தவிர்க்கவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இணைந்து பணியாற்றுவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதியளித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் பொரிஸின், உக்ரைனின் தலைநகரான கியிவ் விஜயத்திற்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து நிலையான ஆட்சி மற்றும் ஆற்றல் சுதந்திரத்தை மேம்படுத்த 88 மில்லியன் பவுண்டுகள் வழங்குவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது.

இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ‘ஒவ்வொரு உக்ரேனியரும் தாங்கள் எவ்வாறு ஆளப்படுகின்றனர் என்பதைத் தீர்மானிப்பது உரிமையாகும். ஒரு நண்பராகவும் ஜனநாயகக் கூட்டாளியாகவும், பிரித்தானியா உக்ரைனின் இறையாண்மையை அழிக்க முயல்பவர்களின் முயற்சிகளை தடுக்கும்.

ரஷ்யா பின்வாங்கி ஒரு இராஜதந்திர தீர்மானத்தைக் கண்டறியவும் மேலும் உயிர் சேதங்களை தவிர்க்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என கூறினார்.

வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், பிரதமருடன் உக்ரைனுக்கு செல்லவிருந்தார். ஆனால் திங்களன்று அவர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாகவும், சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அறிவித்தார்.

இதனிடையே, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், இந்த வார இறுதியில் ;, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேசுவார் என்று நம்புகிறார்.

ரஷ்யா உக்ரைனுடனான தனது எல்லைக்கு அருகில் 100,000 துருப்புக்கள், டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளை குவித்துள்ளது. ஆனால், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறும் கூற்றை மறுத்துள்ளார்.

எவ்வாறாயினும், ரஷ்யாவின் சொந்த பாதுகாப்பிற்கு இது அச்சுறுத்தல் என்று வாதிட்டு, நேட்டோவில் இணைவதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று உக்ரைனுக்கு அவரது அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது மற்றும் மேற்கத்திய நாடுகள் மாஸ்கோ மீது படையெடுப்பு நடந்தால் பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்துவதாக அச்சுறுத்துகின்றன.

Related Posts

Leave a Comment