மன்னர் சார்லஸின் கிறிஸ்மஸ் செய்தியில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி .!

by Lifestyle Editor

மன்னர் சார்லஸ் தனது முதல் கிறிஸ்மஸ் செய்தியில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

கிறிஸ்மஸ் தினத்தன்று 15:00 மணிக்கு ஒளிபரப்பப்படவிருக்கும் சார்லஸ் தனது உரையை ஆற்றும் படம், விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் சேப்பலில் மன்னரைக் காட்டுகிறது.

கடந்த 1957இல் முதல் தொலைக்காட்சி செய்தியில் தோன்றிய மறைந்த ராணியால் வழங்கப்படாத முதல் தொலைக்காட்சி வருடாந்திர ரோயல் கிறிஸ்மஸ் தின ஒளிபரப்பு இதுவாகும்.

செப்டம்பரில் ராணியின் இறுதிச் சடங்கின் போது அர்ப்பணிப்பு சேவை நடைபெற்ற தேவாலயத்தில் இந்த ஆண்டு செய்தியை அவர் பதிவு செய்வதை மன்னரின் புகைப்படம் காட்டுகிறது.

அவரது தாய் மற்றும் தந்தை இளவரசர் பிலிப் இருவரும் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் உள்ள ஜோர்ஜ் VI நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பக்கிங்ஹாம் அரண்மனையால் வெளியிடப்பட்ட படம், பிளாஸ்டிக் இல்லாத, மறுசுழற்சி செய்யக்கூடிய அலங்காரங்கள் மற்றும் பின்னணியில் ஹோலி மற்றும் படர்கொடி ஏற்பாடுகளுடன் கிறிஸ்மஸ் மரத்தின் முன் சார்லஸ் மன்னர் நிற்பதைக் காட்டுகிறது.

Related Posts

Leave a Comment