“மொத்த வியாதிக்கும் ஒரு மாத்திரை கேட்டவரு”.. இவர்தான் அந்த 6வது போட்டியாளர் !

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட்டின் 6வது போட்டியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி அல்டிமேட் என்ற பெயரில் நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. வழக்கமான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பாக உள்ளது. அதனால் எடிட்டிங் இல்லாமல் லைவ்வாக அனைத்தையும் பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள்தான் பெரும்பாலும் பங்கேற்க உள்ளனர். பிரச்சனைக்குரிய ஒரு போட்டியாளர் இருந்தாலே பிக்பாஸ் வீடு தாங்காது. தற்போது கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் சர்ச்சைக்குரியவர்கள்தான். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களான சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி உள்ளிட்டோர்களின் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. அதனால் 6வது போட்டியாளர் யாராக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தாடி பாலாஜிதான் அந்த போட்டியாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோ, இனி தாடி பாலாஜி இல்ல, கேடி பாலாஜியை பார்க்கப்போகிறீங்க என சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment