இனி முகக்கவசமின்றி வெளியே செல்லலாம் – சில கட்டுப்பாடுகளை நீக்கியது இங்கிலாந்து!

by Column Editor

அதிகளவான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால் மக்களிடையே கடுமையான நோய் ஏற்படுவதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதும் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையிலேயே இன்று(வியாழக்கிழமை) முதல் மக்கள் முகக்கவசம் கட்டாயமாக அணியத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுகூடலுக்கான பெரிய இடங்களுக்குள் நுழைவதற்கு இனி தடுப்பூசிச் சான்றுகள் தேவையில்லை எனவும் இங்கிலாந்து அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

அத்துடன், மாணவர்கள் வகுப்பறைகளில் முகக்கவசம் அணியுமாறு ஆலோசிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்த்தில் 12 வயதைத் தாண்டியவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு, இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன், 81 சதவீதமானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment