110
பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாடு மீதான தடை என்ற செய்திகள் ஊகங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சிறுவர்களை பாதுகாப்பதன் அவசியத்தை அரசாங்கம் தொடர்ந்து அவதானிக்க வேண்டும் என அறிவியல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் இளைஞர்களின் நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அமைச்சர்கள் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆகவே எதிர்காலத்தில், சமூக வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இளைஞர்களுக்கு சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகள் போலியானவை என்றும் அறிவியல்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.