தொடர்ந்து குறைந்த தங்கம் விலை

by Column Editor

தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில், ஒரு நாள் விலை குறைந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் விலை உயர்த்தப்படுகிறது.

இன்றைய நாளில் சென்னையில் இன்றுஜனவரி 25 ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,603 ஆகக் குறைந்துள்ளது. இதனையடுத்து, நேற்று 36,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 16 ரூபாய் குறைந்து 36,824 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,760 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,550 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,550 ஆகவும், கேரளாவில் ரூ.4,551 ஆகவும், டெல்லியில் ரூ.4,773 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,785 ஆகவும், ஒசூரில் ரூ.4,595 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,590 உள்ளது.தொடர்ந்து வெள்ளியின் விலையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.69.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.68.40 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment