ஒரு டன்னுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

by Column Editor

ஓமன் வளைகுடாவில் ஒரு டன்னுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்களை, றோயல் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏறக்குறைய 10 மணிநேரம் நீடித்த நடவடிக்கையில், றோயல் கடற்படையினர் உள்ளிட்ட கடற்படைக் குழு,எச்.எம்.எஸ். மாண்ட்ரோஸில் இருந்து புறப்பட்டு, ஓமன் கடற்கரைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய படகில் ஏறி சட்டவிரோத போதைப்பொருட்களை கைப்பற்றியது.

சட்டவிரோத போதைப்பொருட்கள், பகுப்பாய்வு செய்யப்பட்டு அழிக்கப்படுவதற்கு முன்னர், ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் ஒரு பகுதியாக செயந்படும் எச்.எம்.எஸ். மாண்ட்ரோஸுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

அவற்றில் 663 கிலோ ஹெராயின், 87 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் 291 கிலோ ஹாஷிஷ் மற்றும் மரிஜுவானா ஆகியவை அடங்கும். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 15 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

படகு அல்லது அதன் தோற்றம் பற்றிய விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு அரபிக்கடலில் எச்.எம்.எஸ் மாண்ட்ரோஸ், 2.4 டன் போதைப்பொருளைக் கைப்பற்றியதில் இருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் இதுவாகும்.

Related Posts

Leave a Comment