இங்கிலாந்தின் பிளான் பி நடவடிக்கைகள் நிறைவுக்கு வருகின்றது: பிரதமர் அறிவிப்பு!

by Column Editor

இங்கிலாந்தின் பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முதல் நிறைவுக்கு வருமென, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் கொவிட் கடவுச்சீட்டு இரண்டும் கைவிடப்படும்.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசாங்கம் உடனடியாக கைவிடும் என்றும் பிரதமர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசிகள் காரணமாக இங்கிலாந்து ‘பிளான் -ஏ’க்கு திரும்புகிறது மற்றும் மக்கள் பிளான் பி நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றினார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

ஓமிக்ரோன் அலை தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக சந்திப்பில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ‘இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தருணம். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்யும் போது இந்த நாடு என்ன சாதிக்க முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது’ என கூறினார்.

Related Posts

Leave a Comment