பிக்பாஸ் அல்டிமேட்: 24 மணி நேரமும் மல்லுக்கட்ட போகும் போட்டியாளர்கள் யார் தெரியுமா?

by Column Editor

பிக்பாஸ் சீஸன் 5-இன் கடைசி எபிசோடிலேயே “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது.

90 நாட்கள் வரை இருந்த எந்த பரபரப்பும் இல்லாமல், கடைசி சில நாட்கலில் நாம் மிகவும் கணித்தபடியே நடந்து முடிந்த பிக்பாஸ் சீஸன் 5-இன் கடைசி எபிசோடிலேயே “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது.

பிக் பாஸ் அல்டிமேட் என்பது தொடர்ந்து 24 மணிநேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பபட உள்ள ஒரு ரியாலிட்டி ஷோ ஆகும். அதாவது இந்த நிகழ்ச்சி டிவிக்களில் ஒளிபரப்ப படாது. ஆம்! இந்நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாக மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.

இதனை தொடர்ந்து வெளியான ஒரு ப்ரோமோவின் வழியாக இரண்டு போட்டியாளர்களின் பெயர் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது.

“வேலை நடக்கட்டும்.. நிறுத்தாதீங்க! வீடு அப்படியே இருக்கட்டும்! சுவற்றை மட்டும் தூக்கி கட்டுங்க.. வரபோற ஆளுங்க அப்படி” என்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ப்ரோமோவின் வழியாகவே நடிகர் கமல்ஹாசன்ஒரு குறிப்பை நமக்கு தருகிறார்.

“சுவற்றை தாண்டும் ஆட்களையும் நாம் பார்த்து இருக்கிறோம்” என்று கமல்ஹாசன் கூறும் போது, அவர் குறிப்பிடுவது காமெடி நடிகர் பரணியை தான் என்பது புரிகிறது.

அடுத்ததாக அவர் கொடுக்கும் ‘ஹின்ட்’ வழியாக வனிதாவின் வருகையை நம்மால் உறுதி செய்ய முடிகிறது. இதுபற்றிய குறிப்பில் “இப்போ வர போறவங்க வத்தியும் வச்சி இருக்காங்க, வீட்டை பத்தவும் வச்சி இருக்காங்க என்று கூறி.. விழியை பிதுக்கிறார் கமல் ஹாசன்!

பின்னர் கமல் ஹாசன், கன்பெக்ஷன் ரூமில் அமர்ந்தபடியே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விவரிக்கிறார். “விட்டதை பிடிக்க, விடாமல் மல்லுக்கட்ட போறாங்க.. அதை 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காட்டப் போறாங்க! என்று கூறியதோடு நில்லாமல்… பிக் பாஸையும் வம்பிற்கு இழுக்கிறார்.

“வேலை ஜாஸ்தியா இருக்கும். சூடு தண்ணீல உப்பு போட்டு குடிங்க!” என்கிறார். அதற்கு பிக்பாஸும் “ஓகே கமல் சார்!” என்று பதில் அளிக்கிறார். பின்னர் உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் திரும்பி வருகிறார்கள் என்று கூறி தன் ஸ்டைலில் ப்ரோமோவை முடிக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

முன்னரே குறிப்பிட்டபடிபிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் பட்டியலின் முதல் இரண்டு இடத்தில் நடிகை வனிதா மற்றும் நகைச்சுவை நடிகர் பரணி உள்ளனர்.

அதனை தொடர்ந்து “வீரத்தமிழச்சி” ஆக இண்டர்நெட்டில் ட்ரெண்ட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து தற்போது மாடலாக வலம் வரும் ஜூலி கலந்து கொள்வார் என்பது போல் தெரிகிறது.

பின்னர் சுரேஷ் சக்ரவர்த்தி, கவிஞர் மற்றும் சினிமா பாடலாசிரியர் சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷெரின் உள்ளிட்ட பழைய மற்றும் மிகவும் பிரபலமான பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ உள்ள பிக் பாஸ் அல்டிமேட் 24×7 போட்டியிலும் கலந்து கொள்வார்கள் என்பது போல் தெரிகிறது.

Related Posts

Leave a Comment